Categories
அரசியல்

“தலைவா ஹேப்பி தீபாவளி”‌ வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள்….. பிளையிங் கிஸ் கொடுத்த நெகிழ்ந்த ரஜினி…..!!!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வீட்டில் பூஜை செய்து புத்தாடை அணிந்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா-ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டிற்கு ரசிகர்கள் சென்றுள்ளனர். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கும்பிட்டு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ரசிகர்களும் ரஜினியை பார்த்து தலைவா ஹேப்பி தீபாவளி என்று கூறினார். ஆனால் ரஜினிகாந்த் இன்று சில மணி நேரங்களில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மேலும் தீபாவளி பண்டிகை என்ன தான் சிறப்பாக கொண்டாடினாலும் தலைவரை பார்த்தால் தான் பண்டிகையானது முழு மனதோடு நிறைவடைவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |