ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது.
உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் இச்சூழ்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூரியதாவது “நாங்கள் இந்தியா தலைவர்களுடன் பல்வேறு மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம்.
மேலும் இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவது சரியான முடிவு இல்லை. மேலும் இது வரலாற்றில் தவறான பக்கங்களில் எழுதப்படும். இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு செயல் சட்டவிரோதமானது. மேலும் ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கிறதா என்பதை உலகம் உற்று கவனித்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.