Categories
சினிமா தமிழ் சினிமா

இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்கள் செய்த சேட்டை…. “வாரிசு” பட தயாரிப்பாளருக்கு வந்த புது தலைவலி…..!!!!!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். இதனால் விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆகவே அது குறித்து முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு “வாரிசு” பட தயாரிப்பாளர் தில்ராஜுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்

Categories

Tech |