Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…” ஒரு குடும்பம் செய்த காரியம்”… திருச்சி அருகே பரபரப்பு..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்  நிகழ்வு  நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க  முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி  வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் . விசாரணையில் அவர்கள் முன்னியூர்  கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பழனிச்சாமி மற்றும் 27 வயதுடைய பிரியா இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

பழனிசாமி இன்ஜினியரிங் முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழனிசாமியின் தந்தை இறந்து விட்டதால்  தற்போது அவர் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள  ஆறு ஏக்கர் நிலத்தில்  வீடுகட்டி விவசாயம் செய்து வந்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் பாதையில் ஊராட்சி தலைவர் மற்றும் அவரது ஆட்கள் குழிதோண்டி  வீட்டிற்குள் செல்ல விடாமல் தடுப்பதாகவும் மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை மற்றும் மரவள்ளி கிழங்குகளை வெளியே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை  அவர் தட்டி கேட்ட பொழுது அவரை கொலை செய்து விடுவோம்  என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் ஊரில் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாததால் குடும்பத்துடன் தீக்குளித்து  தற்கொலை செய்தய  முயன்றதாக அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பழனிசாமி – பிரியாவை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். அப்போது  அவர்கள்  பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க முறையிட்டார். உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்த ஆட்சியர் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |