Categories
உலக செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா…? “கட்டுப்பாடுகளை மீறிய தம்பதி”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில்  கட்டுப்பாடுகளை மீறிய தம்பதியருக்கு காவல்துறையினர் 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் , விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக கொரோனா அதிகமுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும்  சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயிலிருந்து பிரிட்டனுக்கு திரும்பிய ஒரு தம்பதியினர்  தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தவறியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் இருவருக்கும் பத்தாயிரம் பவுண்ட் அபராதத்தை விதித்துள்ளனர். இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது,” துபாயிலிருந்து பிரிட்டனுக்கு திரும்பிய ஒரு தம்பதியினர் தனிமைப்படுத்த தவறிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதற்கு பிறகு காவல்துறையினர் தம்பதியரை அடையாளம் கண்டு இருவருக்கும் பத்தாயிரம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். தற்போது கணவன் -மனைவி இருவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |