தம்பதியினரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற அண்ணன் உள்ளார். இவர்களுக்கு இடையில் சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வரதராஜன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தியாகராஜனை கைது செய்துள்ளனர்.