Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. அண்ணன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காசிராஜன், லட்சுமண பெருமாள், சக்தி பாலன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காசிராஜனும், லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனையடுத்து சக்தி பாலன் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமண பெருமாள் மதுபோதையில் அடிக்கடி தாயாரிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமண பெருமாள் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் லட்சுமண பெருமாளும், சக்தி பாலனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் லட்சுமண பெருமாள் சுத்தி பாலனை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சக்தி பாலன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாயார் லட்சுமி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமண பெருமாளை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |