Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு அச்சம்…. மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க…. தமிழக அரசு முடிவு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் எடுக்கும் விபரீத முடிவை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலின் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் ஒரு மாணவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் இது போன்ற விபரீத தேர்வுகளை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அனைத்து மாணவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் மனநல கவுன்சிலிங் வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதைத் தடுக்க கூடிய வகையிலும் அவர்களுக்கு உளவியல் ரீதியாக நம்பிக்கையூட்டும் வகையிலும் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியுள்ள 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கவுன்சிலின் வழங்கப்படும். அதற்காக மாவட்டம் வாரியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் மனநல ஆலோசகர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் மாணவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை வழங்குவார்கள்.

இந்த பணி நாளை மறுநாள் முதல் சென்னையில் தொடங்கும். அதன் பிறகு 38 மாவட்டங்களிலும் நடைபெறும். இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Categories

Tech |