தமிழ் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இருப்பினும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் செய்த வசூலை சாதனை குறித்து இங்கு பார்ப்போம். அதன்படி மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் இடம் பிடித்துள்ளது. 13 நாட்களிலே இந்த சாதனையை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.186 கோடி வசூல் ஈட்டி உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் ரூ.424 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பியன், வினோத் ஜோஸ், சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.183 கோடி வசூல் செய்த உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் ரூ.446 கோடி ரூபாய் வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஜய், மாளவிகா மோகன், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.142 கோடி வசூல் செய்து 3 வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் ரூ.300 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இரட்டை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்ததால் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.140.80 கோடி வசூல் செய்து 4 வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் ரூ.298.7 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.131 கோடி வசூல் செய்த 5வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் ரூ.263 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 9 வது இடத்தை பிடித்துள்ளது.