Categories
மாநில செய்திகள்

கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை… “1 கோடி ரூபாய் நன்கொடை” கொடுத்து அசத்திய தமிழக அரசு…!!

கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது.

கனடாவிலுள்ள ரொறன்ரோ என்ற பல்கலைக்கழகம் ஆண்டாண்டு காலமாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமையப்போகிறது. தமிழ் இருக்கையின் மூலம்  தமிழை பற்றி கற்கவும், ஆய்வு செய்யவும் முடியும் . அதற்கான முயற்சிகள் தற்போது ரொறன்ரோ பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு மூன்று மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. கனடாவில் வசிக்கும்  தமிழ் மக்கள் 2.44 மில்லியன் டாலர்களை  திரட்டி பல்கலைக்கழகத்திற்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் ஒன்றை எழுதினர். அதனால் தற்போது தமிழ்நாடு அரசு அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. தமிழ் இருக்கை அமைவதற்கு தற்போது 5,60,000 டாலர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் உதவியால் விரைவில் தமிழ் இருக்கை அமைந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |