தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படைவீரர்கள், பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உதவியாளருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பன்வாரிலால் புரோகித் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் ஆளுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.