Categories
தேசிய செய்திகள்

என்ன…? ஆறாம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக இளைஞரணித் தலைவர் வேண்டுகோள்….!!!

வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாட நூல்களை மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் முழுக்கள் என்ற தலைப்பிலான  பாடத்தில் சூதாட்டத்தை கொண்டா ரம்மி விளையாட்டு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகல்வித்துறை பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “தமிழக மாநில பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சூதாட்டத்தை கொண்ட ரம்மி விளையாட்டு எப்படி விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டது ஆச்சரியமளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும். முழுக்கள் என்ற பாடத் திட்டத்தின் நோக்கம் எண்களை மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால் அதற்கு  வேறு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில் ரம்மி விளையாட்டை உதாரணமாக வைத்திருப்பது தவறான விஷயம்.

இந்த பாடம் எண்களை கற்றுத்தராது மாணவர்களுக்கு ரம்மியை தான் கற்று தரும். இதற்கிடையில் இணையதளத்தில் ரம்மி ஆட்டத்தால் இளைய சமுதாயம் சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் ஏற்படுத்தும் சூழலில் இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்க செய்யும். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்க கூடாது. மேலும் முழுக்கள் தலைப்பிலான பாடத்தில் ரம்மிய ஊக்குவிக்கும் பாடத்தை மாற்றினால் மட்டும் போதாது. சீட்டுகள் உடலான கூடிய அந்த பாட மாணவரின் கண்ணில் கூட படக்கூடாது. இதற்காக தற்பொழுது வரும் கல்வி ஆண்டில் அந்தப்பாடம் இல்லாத புதிய பாட நூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |