பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில் பள்ளிகளில் மாணவர்களை மத மாற்றத்திற்கு துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் மதமாற்றம் வகையில் அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் இதனால் மாணவர்களுக்கு மன ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைப்போலவே கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் மதமாற்றம் தொடர்பான பிரச்சனையில் பள்ளி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இப்பிரச்சனையை விசாரிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கியது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான செயல்பாடுகள் மற்றும் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தமிழக அரசிடம் மதமாற்றம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் என்ன சிரமம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் பள்ளியில் நடைபெற்ற மதமாற்றம் தொடர்பான வழக்கை நாளை விசாரணை செய்வதாகவும் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.