Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகள் விதைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள திருவாங்கரணை ஊராட்சியில் 5 கோடி பனை விதைகள் நடவு பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருவாங்கரணை ஊராட்சியில் மேராக்கி ரோட்டரி கிளப் ஆப் சென்னை மற்றும் திருவாங்கரணை எக்ஸ்நோரோ ஆகியவை இணைந்து பண்ணை விதைகள் நடவு பணியை மேற்கொண்டு வருகின்றது. இதன்படி தமிழகம் எங்கும் 5 கோடி பனை விதைகள் விதைப்பு மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டுள்ளது.

திருவாங்கரணை எக்ஸ்நோரோ நிறுவனர் திரு ஜானகிராமன் ஒருங்கிணைப்பின் கீழ் விவசாய சங்கத்தைச் சேர்ந்த திரு நேரு, திரு மோகன கிருஷ்ணன், ரோட்டரி, மெக்ராக்கி,  பிரஸிடெண்ட்ஸ் சுசித்ரா, ஸ்ரீகலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Categories

Tech |