தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 74 பேர் உயிரிழந்தனர்.
இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 994 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 584 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,717 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் குணமடைந்தனர்.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 490, சேலம் 309, திருவள்ளூர் 300, செங்கல்பட்டில் 899 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 291 பேருக்கும், கடலூரில் 251 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.