தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 599 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 87 கொரோனாவிற்கு பலியாகினர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8012 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 446 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் 407, செங்கல்பட்டு 364, திருவண்ணாமலை 242, திருவள்ளூரில் 277 அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.