தமிழகத்தில் ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
76 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8,307ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8307 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 978 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 591 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 227 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 4 லட்சத்து 41 ஆயிரத்து 649 பேர் குணமடைந்தனர்.