Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை தொடக்கம்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், ” தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராத நிலையில், பெற்றோர்கள் தரும் ஆவணத்தின் படி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான 2020-2021 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் சேர்க்கையின் போதே, இலவச நோட்டு புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உபகரண பொருட்கள் அனைத்தும் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் பட்சத்தில், காலையில் இருபது பேர், மாலையில் 20 பேர் என சேர்க்கை நடத்தப்படும். மேலும் முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை வருகின்ற 24ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |