தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தனர்.
இதில் 5859 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,685 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,748 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு நிகராக கோவை, கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் 545, கடலூரில் 434 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 293, சேலம் 250, திருவள்ளூர் 244 திருவண்ணாமலையில் 239 பேரும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.