Categories
அரசியல்

“பக்கத்து மாநிலத்துல கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… அரசு சொல்லுறத கேளுங்க – சுகாதாரத்துறை செயலாளர்….!!

தமிழகத்தில் PCR என்றழைக்கப்படும்  கொரோனா  பரிசோதனை செய்து கொண்டவர்களில்  100ல் ஒருவருக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது  பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும்  அரசு கூறும்  பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இல்லையென்றால்,அண்டை மாநிலங்களை போல தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “சென்னையில் ஒரு நாளில் 140 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 36 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பாதுகாப்பானவை  தான். அதை பொதுமக்கள் அனைவரும் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை   செலுத்தி கொண்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் 0.9% பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு கூறும்  உரிய  பாதுகாப்பு வழிமுறைகளை  பொதுமக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |