தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதற்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பொழியும் .
வட தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு போன்ற இடங்களில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வரை பலத்த வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.