Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் 956 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 2708 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 747 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 4,014 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் 3 இலக்கில் கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 253 பேருக்கும், சேலத்தில் 165 பேருக்கு, திருவள்ளூரில் 133 பேருக்கும், செங்கல்பட்டில் 143 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |