தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 528 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 528 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்லோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 64 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 42 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8154 ஆக அதிகரித்துவிட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 991 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 606 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை 440, சேலம் 300, திருவள்ளூர் 296, செங்கல்பட்டில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் 263, விழுப்புரம் 189, காஞ்சிபுரம் 173, திருப்பூர் 155 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.