Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 1- ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தன்னார்வு அடிப்படையில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் 10, 12 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் விருப்பப்படும் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வரலாம் என்றும் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வந்து பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டு செல்லலாம் என்றும் பள்ளிகள் பணியாற்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |