சூரியன் உதிக்கும் நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் மீது நண்பகலில் சூரிய ஒளி படும் போது மனிதர்களின் நிழல் தரையில் தெரிவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட நாட்களில் நிழல் இல்லா தினம் காணப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. நிழலில்லா நாட்கள் என்பது நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் உதிக்கும் அப்படி உதிக்கும்போது நமது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலடிக்கு நேராக இருக்கும்.
செங்குத்தாக இருக்கும்நம்மால் பொருள்களின் மீது நிழல் படும் போது அதன் அடி பகுதியிலேயே நிழல் இருக்கும் நம்மால் அதனை பார்க்க முடியாது என்பதால் இதனை நிழலில்லா நாள் எனவும் பூஜ்ஜிய நிழல் நாள் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிழல் இல்லா நாட்கள் பித்த நகரங்களின் பட்டியல்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஏப்ரல் .10, செப்டம்பர் .1-ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், ஏப்ரல் .11, ஆகஸ்ட் 31-தேதிகளில் கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர், ஏப்ரல் .12, ஆகஸ்ட் .30-ம் தேதிகளில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஏப்ரல் .13, ஆகஸ்ட் .29-ம் தேதிகளில் சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏப்ரல் .14, ஆகஸ்ட் .28-ம் தேதிகளில் கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி, ஏப்ரல் .15, ஆகஸ்ட் . 27-ம் தேதி அன்று தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குடி.
மேலும் இதனை தொடர்ந்து.16, ஆக.26-ம் தேதிகளில் வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், ஏப்.17, ஆக.25-ம் தேதிகளில் பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழநி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஏப்.18, ஆக. 24-ம் தேதிகளில் கோவை, கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்.
அதன் பிறகு ஏப்.23, ஆக.19-ம் தேதிகளில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், ஏப்ரல் .24, ஆகஸ்ட் .18-ம் தேதிகளில் குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய நகரங்களில் நிழல் இல்லா நாட்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.