Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் பணி”… பாதுகாப்பு பணியில் ஈடுபட 4,500 ராணுவ வீரர்கள் வருகை…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4500 துணை ராணுவ படை வீரர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போகிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 4500 மத்திய துணை ராணுவ வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 4500 துணை ராணுவ வீரர்களும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று கோவையிலிருந்து சென்னைக்கு 15 CRPF  துணை ராணுவ வீரர்கள் வந்தனர். இன்று மங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த 92 துணை ராணுவ வீரர்கள்  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக செல்ல உள்ளனர். இதற்கு அடுத்தது பிப்ரவரி 27ஆம் தேதி ஒரு ரயில் முழுவதும் மணிப்பூரில் இருந்து  தமிழகத்திற்கு துணை ராணுவ வீரர்கள் வரவிருக்கின்றனர்.

Categories

Tech |