புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பர நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை முன்னதாக கோவில் பொது தீட்சகர்கள் மரியாதை செய்து அழைத்து வந்து, கனக சபைக்கு மேல் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதோஷ நாளில் நடராஜனை தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோவிலுக்கு வரும்போது நான் மிகவும் இன்பம் அடைவேன். தமிழக மக்கள் ஆனந்தமாக இறைவனை தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வருவது ஒரு சைக்கோ தெரபி என பாரம் இருந்தாலும் சரியாகிவிடும். அதனை தொடர்ந்து வெளிநாடுகளில் மூளைக்கு மூளை மனநல மருத்துவமனை இருக்கும். தமிழகத்தில் கோவில்கள் இருக்கும்.
இறைவன் காலடியில் கஷ்டங்களை சமர்ப்பித்து விட்டால் கஷ்டங்கள் நீக்கிவிடும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்கும் ஒரு முயற்சி நடக்கின்றது. தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான். தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஆன்மீக தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது. இதனையடுத்து புதுச்சேரி மின்துறை தனியார் மையம் ஆக்கப்பட்டது. அதனைப் போல வேறு என்னென்ன துறைகளை தனியார் மையமாக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எங்களின் கொள்கை முடிவில் எது எது மக்களுக்கு நல்லது அதை செய்வோம். அதனைத் தொடர்ந்து பொதுத் துறைக்கு சொந்தமானதை தனியாருக்கு மாற்றம் செய்வதற்காக தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உங்களை நியமனம் செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறுகிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்படிதான் சொல்லுவார். இதை சிவா கிட்ட தான் முறையிட வேண்டும். குழந்தைகளும் நல்லா படைத்து முன்னேற வேண்டும் என்பதுதான் நமது எண்ணம் . அதனை போல நவோதயா வேணாம், கேந்திரிய வித்யாலயா வேண்டாம் இப்படியே சொல்லிக் சொல்லி மாணவ, மாணவிகளை கல்வி தரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார்கள். அரசாங்கம் பள்ளிகளும் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். அதை தான் நாங்கள் செயலாற்றி வருகிறோம். மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் என்று அக மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.