Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தம்மை பற்றி நிர்மல் குமார் அவதூராக பேசிய வருவதாக கூறினார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட நிர்மல் குமாருக்கு தடை விதித்து, நீதிபதி மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 29ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |