Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்…. சூப்பிரண்டின் தகவல்….!!

தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா மற்றும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தேர்தல் ஏற்பாடுகளின் பாதுகாப்பு பணிகள் பற்றி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். இதனை அடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிகமான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர எல்லை பகுதி உள்பட 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த சோதனை சாவடிகளில் 3 காவல்துறையினர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் இதன் மூலமாக நகர எல்லைக்குள் எந்தெந்த வாகனங்கள் செல்கிறது எனவும், வாகனங்களில் என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்கிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |