தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லை என தமிழக அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளரான பலராமன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவரான தண்டாயுதபாணி முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் தமிழக அரசின் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து இறுதியில் சுந்தரமூர்த்தி நன்றி கூறியுள்ளார்.