தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தலில் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டதால் 45 நாட்கள் புத்துணர்வு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை கல்வித்துறை அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பயிற்சி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் வழியே கற்றல் திறனை அதிகரிக்க பள்ளிகளில் கணினி வழி தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த தேர்வு 9-12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு படத்திலும் பலதேர்வு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி தேர்வு வருகிற 12-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கணினி வழியில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.