Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிமுகவிற்கு காட்டிய தில்லாலங்கடி….. ஷாக்கில் உறைந்து போன OPS-EPS…..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,‌குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை  தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைகளில் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று தங்க கவசத்தை அணிவிப்பது வழக்கமாக இருந்து வந்தது. தேவர் ஜெயந்தி குருபூஜை விழா முடிந்ததும் தங்க கவசமானது மீண்டும் லாக்கரில் வைக்கப்படும். இந்த லாக்கரின் சாவி அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடம் பொறுப்பாளர்களிடம் இருக்கும். ஆனால் தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு என செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பொருத்தவரை தங்க கவசம் கிடைத்தால் தங்கள் தரப்புக்கு கூடுதல் பலம்.

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இது மான பிரச்சனை என்பதோடு சமூக மக்களிடையே மிச்சம் மீதி உள்ள செல்வாக்கும் காணாமல் போய்விடு என்பதால் சற்று கூடுதல் கவனத்துடன் காய் நகர்த்துவதாக தெரிகிறது. தேவர்குரு பூஜைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ளபோது இருதரப்பினும் இப்போதே தங்க கவசம் கேட்டுள்ளதால் இருவரிடம் யாரிடம் தங்க கவசத்தை ஒப்படைப்பது என்பதில் வங்கி அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு டிடிவி தினகரன் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது மாவட்ட ஆட்சியர் தான் தங்க கவசத்தை பெற்று தேவர் குருபூஜை முடிந்து, மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார். அதனைபோலவே தேவர் குரு பூஜையில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கக்கூடிய வகையில் இந்த ஆண்டு கலெக்டரிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தங்க கவசமா அதிமுக பேரை சொன்னால் தக்காளி கூட கிடைக்காது. ஏனென்றால் திமுக அதில் இருக்கும் வரை அதிமுகவுக்கு தில்லாலங்கடி தான் கட்சியின் நலன் விரும்பிகள் ஓபன் ஸ்டேட்மென்ட் தருகின்றனர்.

Categories

Tech |