Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கவர்னரை கண்டிக்கிறோம்” கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேருந்து நிலையத்தில் வைத்து தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவை நிராகரித்த தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தலைவர் திலீபன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த திலகா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட பல அமைப்புகளைச் சேர்ந்த 20-க்கும் அதிகமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |