தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபை வருகின்ற 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு குடி முடிவு செய்யும். சட்டசபை தேர்தல் கூட்டத்தொடர் விரைவில் நேரடியாக ஒளிபரப்ப செய்யப்படும். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் அனுப்பிய கடிதம் பரிசினையில் உள்ளது. சட்டசபை மரபு படி முடிவு செய்யப்படும். மேலும் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.