தமிழகத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல், பதவி உயர்வு, பணி நிறைவல் கலந்தாய்வு முறை மூலமாக EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், தமிழகத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு தொடக்க கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு EMIS தளத்தின் மூலம் பொது மாறுதல் நடைபெற்றது. தற்போது அரசு ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளிகளில் பதிவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாணவர்களுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்படாதவாறு மற்ற அரசு பள்ளிகளில், நிதி உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக பணிபுரியும் ஆசிரியர்களை மாற்று பணியில் நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு மற்றும் பணிமனை வழங்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.