பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாகப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனீர் ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பந்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 ஆம் தேதி அன்று முடிவடைந்தது. அதன்பிறகு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது சேவை மையங்கள், தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழு வீச்சில் இயங்கிட வேளாண்மை மற்றும் உழவர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30ம் தேதி நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சம்பா, தாளடி, பிசானம் நெற் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நவம்பர் 21-ம் தேதி வரை நீடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளால் தமிழகத்தில் நடப்பு 2022-2023 ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவ நெற்ப்பயிரில் இதுவரை 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, 10.94 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்கான மத்திய அரசின் நிர்ணயத்துள்ள 50% இலக்கிற்கு தமிழகத்தில் 88% காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல். மேலும் இயற்கை சிற்றங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விவசாயிகள் எவரும் விடுபடாமல் அனைத்து விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு அனைத்து வகை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக வேளாண் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.