தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனைப்போலவே பண்டிகை காலங்கள் முடிந்து மீண்டும் சொந்த ஊரிலிருந்து விரும்புவோரின் வசதிக்காக 15 ஆயிரத்து 819 பேருந்துகள் இயக்கப்படும். ஸ்டேவே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.