தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணிநிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்து நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை என் நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்களை இல்லை.
அதனால் அரசாணை எண் 131 இன் படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும். அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஒய்வு பெற வேண்டும். அவருக்கு ஓய்வு கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக நீதி இருக்க முடியாது. எனவே அரசாணை எண் 131 இல் உள்ள நிபந்தனைகளை தவிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் எந்த தேதியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.