Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற 6 ஆம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழக, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும்.

ஆனால் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் அதிகபட்சம் வெப்பநிலை 3334 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இதனையடுத்து இன்று மற்றும் நாளை லட்சத்தீவு பகுதிகள் குமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும். அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |