Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம்….. வலுவடையும் தாழ்வு பகுதி…. வெளியான புதிய எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான நிலை உள்ளது. தாழ்வு பகுதி உருவானதில் இருந்து அடுத்து 48 மணி நேரத்தில் வலுவடைந்து வட மேற்கு திசையில் தமிழக, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து சென்னை பொறுத்தவரையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று 373 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று 292 ஆக சரிந்தது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஏரிக்கு நீர் வரத்தும் குறைந்தது. விநாடிக்கு 310 கன அடி நீர் வரும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து 177ல் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசியில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தறிவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |