Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் செய்தியாளர்களிடம் கூறியது, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய உள்ளது.

அதன்படி சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 30ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, மற்றும், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து 1ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளான மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு, சேலம்,நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 3 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆனால் சென்னையை பொருத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்  என்பதால்  மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |