Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு…. தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIEPMD வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் காலியாக உள்ள Software consultant மற்றும் Jr.consultant பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் பார்ப்போம். அதாவது, Software consultant மற்றும் Jr.consultant பணிக்கென 2 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாளர்கள் பணியின்‌ அடிப்படையில் ரூ.25,500 மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வமான தளத்தில் விண்ணப்ப படிவு பெற்று பூர்த்தி செய்து வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Categories

Tech |