Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்… இன்னும் இரண்டே மாதத்தில்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் பருவகால பேரிடர் நோய் தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் செயலாளர் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலகம் உள்ளிட்ட 850 சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் இருந்து 10,000 மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். கூட்டத்தில் 385 சுகாதார பணிகள் துணை இயக்குனர் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பங்கேற்று உள்ளனர். இதில் எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெறும். அதிலும் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா எச்1என்1நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் நடவடிக்கைகள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முதலமைச்சர் சட்ட சபையில் 78 நகர்புற நல்வாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும். அதுமட்டுமில்லாமல் 389 நலமான மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஆனால் 4,307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களின் நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 121 பேருக்கு கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இரண்டே மாதத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |