தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு, திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமண பத்திர பதிவு, அவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகளின் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரித்து வந்த நிலையில், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும் அதை பதிவு செய்யவும் தடை ஏதும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜாதி, மதம் கடந்த திருமணம் செய்வதற்காக சிறப்பு திருமண பதிவு அமலாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சிறப்பு திருமண பதிவு சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பது கட்டாயமானதாகும். சரியான காரணங்கள் இல்லாமல் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரிக்க கூடாது என்றும் இது குறித்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது