சென்னையில் ராமசாமி படையாட்சியார் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிலை மற்றும் உருவ படத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் வேளாண் அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போதுவரை 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அதில் 364 மாணவ- மாணவிகளிடம் மனநல ஆலோசனை வழங்கபட்டுள்ளது .
ஆனால் மாணவ-மாணவிகளிடம் நீட் தேர்வு குறித்து ஏட்டிக்கு போட்டியாக பேசி மாணவர்களே குழப்பம் அடையச் செய்ய நாங்கள் காரணமாக ஒருபோதும் இருக்க மாட்டோம். அதேபோலவே யாரால் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது என்றும் , நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டோம் என்று அடம் பிடித்துக் கொண்டு இருப்பவர் யார் என்றும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் .
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலமாக நேற்று ஒரே நாளில் 42 ,743 பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு 4 ,93,544 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் . இந்தத் திட்டம் தினந்தோறும் 30 ஆயிரத்தை கடந்து ஒரு கோடி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 83 மாணவர்களுக்கு மட்டுமே தற்போதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் உள்ள ஒரு சில மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார் .