ஆயர்வேத பெண் மருத்துவருக்கு துபாயில் கிடைத்துள்ள கௌரவமானது அனைருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திண்டிவனத்தை சேர்ந்தவர் டாக்டர் நஸ்ரின் பேகம். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நஸ்ரின் மருத்துவ பணிக்காக 2013 இல் துபாய் சென்றுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு மருத்துவ உரிமம் பெற்றுள்ளார். இதனை அடுத்து சபீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் அமைப்பில் பார்ட்னராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் துபாய் சிறிய நாடு என்றாலும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு செல்லக்கூடிய வகையில் கௌரவ விசாக்களை வழங்கி வருகிறது.
இதுவரை அமீரகத்தில் இருக்கும் 6800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த விசாவை பெற்றுள்ளனர். இதனை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தால் மட்டுமே போதும். இந்த விசாக்களை பெற்றவர்கள் அந்நாட்டு மக்களைப் போலவே நடத்தப்படுவார்கள். அதிலும் துபாயில் இருபது கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே கோல்டன் ஸ்டார் விசா வழங்கப்படும். ஆனால் தற்பொழுது முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த விஷயமாக கருதப்படுகிறது.