தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் அவசர தேவைக்கு மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை முக்கிய வழித்தடங்களில் அதிகரித்து ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு ரயில்கள் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பகுதியளவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை சென்ட்ரல்- கூடூர் ரயில் வழித்தடத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையில் சிறப்பு ரயில் வரும் 19ஆம் இயக்கப்படும். இதனால் குண்டூர்- சென்ட்ரல் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆயுத பூஜை அன்று சென்னை புறநகர் மின்சார ரயில் நேற்று தலைமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப்போலவே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-மதுரை எழும்பூர் வைகை மற்றும் சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் ஆகிய சிறப்பு ரயில்கள் அக்டோபர் 20 மற்றும் 27 தேதி பகுதி அளவு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூர் – மதுரை வைகை மற்றும் காரைக்குடி- சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில்கள் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.