Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டம்…. ஆண்டுக்கு 11 கோடி வரை வருமானம்…..!!!

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் நகைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஏ.வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவள்ளுவரை சேர்ந்த சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பதை பற்றி முறையான பதிவேடுகள் எதுவும் இல்லை என்பதால் தங்க நகைகளை உருவாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உரிய தணிக்கை இல்லாமல் கோவில் நகைகளை இருக்கக் கூடாது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 1997ஆம் ஆண்டு முதல் கோயில்களில் தங்க நகைகளை உருக்கப்பட்டு 5 லட்சம் கிராம் வரை தங்க கட்டிகளாக உருகி அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு சுமார் 11 கோடி வரை வட்டி வருவாய் கிடைத்து வருகிறது என்று கூறினார்.

இதையடுத்து அவர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் ஆகியோர்கள் தலைமையில் கோவில் நகைகளை தணிக்கை செய்யப்பட்டு உருக்கப்பட்டது என்றும் அதற்கான அரசாணை தாக்கல் செய்தார். அதன் பிறகு நீதிபதி, மனு தாக்கல் செய்தவர்களுக்கு மாநில அரசு வெளியிட்ட அரசாணை தெரியுமா என்றும் தெரியவில்லை என்றால் அரசாணையில் உள்ள விவரங்களை அறிந்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து அக்டோபர் 21ம் தேதி  வழக்கை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Categories

Tech |