தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அவர்களின் விகிதம் 0.1 இருக்கிறது. ஆனால் 13 மாவட்டங்களில் மட்டும் சமூக பரவல் காரணமாக இருப்பவர்களின் கொரோனா தொற்று 1விகிதமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாத இறுதியில் மூன்றாவது அலை தொடங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்து நிபுணர்கள் முதல்வர் ஸ்டாலின் தலமையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் சார்பில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பண்டிகை காலங்கள் வருவதால் மார்க்கெட்டுகள், பேருந்து மற்றும் நிலையங்கள் ரயில் நிலையங்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமல் ஆகிய விதிமீறல்கள் ஈடுபடக் கூடாது என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் ஆன்லைன் தரிசனம் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங ஆகியவற்றை பயன்படுத்தி நேரில் செல்வதை சில காலத்திற்கு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.