Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் செல்லும் போது அதிக கட்டணம் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பேருந்துகளில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்கள் சிறப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபதாரம் விதிக்கப்படும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டுக்குரிய வரி செலுத்தாத தனியார் பேருந்துகளை சிறை பிடிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் பற்றி புகார்களை தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256151 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |